போதியளவு எரிபொருள் இருப்பதனால் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் பெறுவதற்கான இரண்டாவது ´கோட்டா´ நேற்று (07) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நள்ளிரவில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். அதன்படி, மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கடந்த வாரம் எரிபொருள் வழங்கப்பட்டதை போன்று எரிபொருள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, QR அமைப்பின் கீழ் கடந்த வாரம் எரிபொருள் விநியோக திட்டம் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார்.
இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது குறிப்பிட்டுள்ளார்.