இலங்கையில் இடம்பெற்ற கார் விபத்தில் இளம் விஞ்ஞானி பரிதாப மரணம்!

மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொனபொல கும்புக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையில் மோதி சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளானத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று (04-02-2023) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் நேனோ தொழிநுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானியும் கொனபொல கும்புக கிழக்கை வசிப்பிடமாக கொண்ட விமுக்தி பிரசாத் ஜயவீர என்ற 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலை பிரதேசத்தில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்த போது அவர் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

சில அபிவிருத்திப் பணிகளின் பின்னர் பாதுகாப்பற்ற முறையில் போடப்பட்டிருந்த வீதித் தடுப்பு மற்றும் கொங்கிரீட் தரையின் மீது கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து இடம்பெற்ற போது காரின் இரண்டு காற்று பலூன்களும் இயக்கப்பட்டுள்ள நிலையில் கார் சுமார் 100 மீட்டர் தூரம் முன்னோக்கி நகர்ந்து வீதியின் நடுவில் உள்ள கொன்கிரீட் பகுதியில் மோதியுள்ளது.

காரின் காற்று பலூனில் இருந்து வீசப்பட்ட பிளாஸ்டிக் துண்டினால் அவரது கழுத்து பகுதி வெட்டப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Recommended For You

About the Author: webeditor