இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக ஜப்பானிய அரசாங்கம் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வான்கள் மற்றும் மினி பஸ்கள் மற்றும் 115 கண்காணிப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) இந்த நன்கொடை அடையாளமாக கையளிக்கப்பட்டது.
இந்த உபகரணங்களை வழங்குவது தொடர்பான ஆவணங்களை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் திரு டேக்கி ஷுன்சுகே (Mr Takei Shunsuke) ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இந்த வாகனங்களை பரிசோதித்ததைத் தொடர்ந்து, ஜப்பானிய இராஜாங்க வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி சுத்ந்திர தின உரையாடலில் ஈடுபட்டார்.
பொலிஸாரின் விசாரணை நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் இந்த உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது.