அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா பாதுகாப்பு தரப்பினரால் அழிக்கப்பட்டுள்ளது

அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்ட வந்த நிலையில் நேற்று 03/02/2023 மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவுக்கு 3(V) MICகு கிடைத்த தகவலின்படி, இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து நடாத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதன்போது சுமார் 7500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என தெரிய வந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்பு தரப்பினரால் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரனைகளை தமன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

 

Recommended For You

About the Author: webeditor