நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவை விட்டு நகர்ந்துள்ளதாகவும், வானிலையில் அதன் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆபத்துக்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில இடங்களில் மி.மீ. 50க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.