தவணை முறையில் வாகனங்களை வாங்குவோருக்கான சுற்றறிக்கை

குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாகனங்களை பெற்றுக்கொள்வதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, வாகனம் தொடர்பான தவணை செலுத்தவில்லை எனக்கூறி மக்களை பயமுறுத்தி நெடுஞ்சாலையில் வாகனங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த சட்டத்தின் கீழ் அதிகாரம் இல்லை என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோரின் பிரச்சினைகளை ஆராயுமாறு ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் பின்வருமாறு,

1. சட்டத்தின் பிரிவு 27 க்கு கவனம் செலுத்தப்பட்டு, RTM 557 (CRTM 395) இல் கூறப்பட்ட பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. குத்தகைதாரர் அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, பொலிஸ் பாதுகாப்பு முன் அறிவிப்பின் மூலம் கோரப்படும் போது, கூறப்பட்ட பிரிவின்படி அமைதியை நிலைநாட்டும் நோக்கத்திற்காக பொலிஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும்.

2. வாகனங்கள்/உபகரணங்களை மீளப் பெரும் நோக்கத்தில் பொலிஸ் அதிகாரிகளின் தலையீடு இருக்கக்கூடாது.

3. மேலும் குத்தகைதாரரிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை என்றால் மட்டுமே, குத்தகைதாரரால் மேற்கண்ட ஷரத்தின்படி சம்பந்தப்பட்ட வாகனம்/உபகரணங்களை கையகப்படுத்த முடியும்.

4. இவ்வாறு, வாகனம்/உபகரணங்களை கையகப்படுத்துவதில் தடை ஏற்படும் போது. குத்தகைதாரர் 28வது சட்ட பிரிவின் விதிகளின்படி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

5. 27 மற்றும் 28 சட்ட பிரிவின் விதிகளை குத்தகைதாரர் அல்லது அவரது முகவர் மீறுவது சட்டத்தின் 30வது பிரிவின் கீழ் அது குற்றமாகும் மேலும் அதற்கான தண்டனை சட்டத்தின் 41(1) துணைப் சட்ட பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. மேலும், மேற்கண்டவாறு நடத்தப்படும் விசாரணையின் போது வேறு ஏதேனும் குற்றம் (கொள்ளை/திருட்டு போன்றவை) கண்டறியப்பட்டால், அதன் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. மேற்கண்ட விதிகளுக்கு மாறாக வாகனங்கள் உபகரணங்கள் வாங்கப்படும் சந்தர்ப்பங்களில் குத்தகைதாரரிடமிருந்து அளிக்கும் புகார்களை சில பொலிஸ் நிலையங்கள் ஏற்க மறுப்பதால், இனிமேல் இதுபோன்ற புகார்களை நிராகரிக்காமல், புகார்களை ஏற்று உரிய விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

8. 31-01-2021 திகதியிட்ட RTM 557 (CRTM 395) என்ற சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கூறிய விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

மேலும் இதற்கு முரணாக செயல்படும் பொலிஸ் அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Recommended For You

About the Author: webeditor