2023 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 0.6% ஆக சுருங்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்திருந்தது.
இந்த ஆண்டு பிரித்தானியாவின் பொருளாதாரம் தலைகீழாகச் செல்லும் என்றும் ஏனைய முன்னேறிய நாடுகளை விட மோசமாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ள போதிலும் பிரித்தானியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக டவுனிங் ஸ்ட்ரீட் வலியுறுத்தியுள்ளது.
அதன்படி சமீபத்திய World Economic Outlook புதுப்பிப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முன்னறிவிப்பு மீண்டும் ஒருமுறை தரமிறக்கியுள்ளது.
கடந்த அக்டோபரில் பிரித்தானியாவின் 0.3% வளர்ச்சிக்கு எதிராக 0.6% சுருங்கும் என்று கணித்துள்ள போதும், அரசாங்கத்தின் கஞ்சத்தனமான செலவினங்களால் நாட்டின் வளர்ச்சி தடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்னறிவிப்பு
இதற்கிடையில் டார்லிங்டனில் உள்ள டீசைட் பல்கலைக்கழகத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித்தொடர்பாளர் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் பிரதமரின் வரிக்குறைப்பு திட்டம் காரணமாக பொருளாதாரம் சற்றுத்தடுமாறியது. இருப்பினும் இறுதியில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் அவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய இது வழிவகுத்தது.
இருப்பினும், கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் பல முன்னறிவிப்புகளை பிரித்தானியா விஞ்சியுள்ளதுடன்,எதிர்வரும் ஆண்டுகளில் ஜெர்மனி மற்றும் ஜப்பானை விட வேகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் பிரித்தானிய பொருளாதாரத்தின் திறனை நிறைவேற்ற அரசாங்கம் “இன்னும் அதிகம்” செய்ய வேண்டும் என்றும்,கடந்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகள் தவறானவை என்றும் போக்குவரத்து அமைச்சர் ரிச்சர்ட் ஹோல்டன் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னறிவிப்பை மறுத்துள்ளார்.