ஹிருணிகா வழக்கு விவகாரம் ஒத்தி வைப்பு!

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, டிஃபென்டர் மூலம் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

7 பேருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை
எனினும் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, சாட்சியங்களை முன்னெடுப்பதற்கு மேலதிக திகதியை கோரியுள்ளார்.

முன்னதாக ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பாடசாலை மாணவர் ஒருவரை தவிர, கடத்தல் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மற்ற 7 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதித்தது.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொடைக்கு கறுப்பு டிஃபென்டரில் வந்த சிலர் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக முறைப்பாட்டாளர் அமில பிரியங்கர என்ற இளைஞர் முறையிட்டிருந்தார்.

Recommended For You

About the Author: webeditor