நாட்டிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(29) கொண்டாடப்படும் உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக வெள்ளைப் புள்ளி

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“இலங்கையில் வருடாந்தம் சுமார் 2000 தொழுநோயாளிகள் பதிவாகின்றனர்.

இந்த தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

தொழுநோய் உடலில் நீண்ட காலமாக வெள்ளைப் புள்ளியாகத் தோன்றுவதால், பலர் அதை ஒரு நோயாக கருதாமல் புறக்கணிக்கிறார்கள்.”என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor