வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்திற்கு வரி அறவிட கோரிக்கை!

சில ஏற்றுமதி நிறுவனங்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படும் ஐம்பத்து மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பான வரிகளை அறவிடுவதற்கான சட்டங்களை தயாரிப்பதற்கு தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுபவர்கள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்கள் ஈட்டும் வருமானத்திற்கு வரி செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், பல்வேறு வரி ஆலோசனை நிறுவனங்களும் ஆலோசகர்களும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி மோசடியை ஊக்குவிக்கும் வகையில் பொய்யான வரி அறிக்கைகளை தயாரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடியை பரிசீலித்து தேவையான கொள்கைகளை அவசரமாக தயாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor