குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் குழந்தைகளின் புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் குழந்தைகளை வகைப்படுத்தாதீர்கள் என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
“குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் தேர்வாக இருந்த புலமைப்பரிசில் தேர்வு முடிவுகள் வந்துள்ளன. புலமைப்பரிசில் பரீட்சை ஒரு முக்கியமான பரீட்சை. ஆனால் பெறுபேறுகளின் அடிப்படையில் குழந்தைகளை வகைப்படுத்தாதீர்கள்.

குழந்தைகளில் நல்ல பிள்ளைகள், கெட்ட பிள்ளைகள், திறமையான பிள்ளைகள், திறமையற்ற குழந்தைகள் என்று நினைக்காதீர்கள். புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்தில் மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தும் பரீட்சை.

பக்கத்து வீட்டுக் குழந்தைகளின் முடிவுகள், வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளின் முடிவுகள், உறவினர்களின் குழந்தைகளின் முடிவுகளுடன் தமது பிள்ளைகளை ஒப்பிட வேண்டாம்.

இந்த காலத்தினுடைய திறமை எதிர்காலத்தில் இருக்காது. அந்தக் குழந்தைகளால் இன்னும் மேலே செல்ல முடியும். எனவே இனி குழந்தைகளை வகைப்படுத்தாதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor