ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் கடந்த மாதம் ஜூலை 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) வெளியிடப்பட்ட அவசரகால சட்டத்தின் பல சரத்துக்கள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளன.

இதன்படி, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 365 (a) மற்றும் 365 (b) நீக்கப்பட்டு, பிரிவுகள் 408 மற்றும் 410 முதல் 420 வரையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், உயர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனை தொடர்பான பிரிவின் கீழ் உள்ள, குற்றவியல் சட்டத்தின் 365, 365 (ஏ) மற்றும் 365 (பி) ஆகியன நீக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை (05-08-2022) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: webeditor