உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியின் இறுதி நாளான இன்றும் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்புமனுத்தாக்கல் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியின் இறுதி நாளான இன்றும் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்புமனுத்தாக்கல் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபை உட்பட இரண்டு நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் அடங்கலாக 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்த ஆட்சி அலுவலகரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாநிதி பத்மராஜா தலைமையில் இந்த வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரச கட்சி ஸ்ரீலங்கா ,முஸ்லிம் காங்கிரஸ் ,ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட பல கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் இன்றைய தினம் வேட்பு மனுக் கலை தாக்கல் செய்தனர்.

இன்றுடன் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் நிறைவுற உள்ள நிலையில் பிரபலமான கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் இன்றைய தினம் தங்களது வேட்ப்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றது.

வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட அதே நேரம் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் விசேட சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இன்றைய தினம் ஈரோஸ் கட்சியானது வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் கடந்த நிலையில் வேட்புமனுதாக்கல் செய்ய வந்த நிலையில் அவர்களின்வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor