நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில கிராமப்புற வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் இல்லாததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு
இதனால், கிளினிக்குகள் மற்றும் வெளி நோயாளர் பிரிவு நோயாளிகள், வெளி மருந்தகங்களில் அதிகளவில் மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருந்து தட்டுப்பாடுள்ள வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.