யாழில் மூன்று பாடசாலைகளில் இருநூறு மாணவர்களுக்கு காலுறைகள் வழங்கி வைப்பு!பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்.தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில்,
பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான நிர்வாகியான அறக்கட்டளையின் செயலாளரும் முன்னாள் வலிகாமம் தெற்கு பிரதேசசபை சுன்னாகம்,யாழ் மாநகரசபை,வட மாகாண சபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம் மற்றும் ஊர்காவற்துறை பிரதேசசபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான E.G லக்ஷ்மன்,ஆசிரியர் சிவப்பிரகாசம் ஆகியோரால் யாழ் ஊர்காவற்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் ஆண்கள் பாடசாலையில் தொண்ணூறு மாணவர்களுக்கும் யாழ் காங்கேசன்துறை தையிட்டி கணேச வித்தியாலயத்தில் நாற்பது மாணவர்களுக்கும் யாழ் தெல்லிப்பளை வறுத்தலைவிளான் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் எழுபது மாணவர்களுக்குமாக மொத்தம் இருநூறு மாணவர்களுக்கு இன்று காலுறைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய நிகழ்வில் குறித்த பாடசாலை களின் அதிபர்களான திரு அன்ரனி துஷ்யந்தன்,திரு.திலகதீபன்,திரு இ.ஆனந்தசொரூபன் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலுறைகள் வழங்கி வைத்து நிகழ்வினைச் சிறப்பித்தனர்.