இந்திய மக்களுக்கு நன்றி கூறிய இலங்கை பிரதமர்

நாட்டிற்கு வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கையில் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தன இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தனது டுவிட்டரில் இதனை பதிவிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த நட்புறவு மலர்ந்துள்ளதாக பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துக் கடிதத்திற்கு பதிலளித் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும்,இலங்கையும் பல துறைகளில் பரஸ்பரம் பலனளிக்கும் கூட்டாண்மையாக பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு
இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக பிரதமர் மோடி, கடந்த திங்களன்று இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கு அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கை மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்து, விரைவான பொருளாதார மீட்சி காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

கடந்த இரண்டு மாதங்களில் இந்திய அரசாங்கத்தாலும் மக்களாலும் நன்கொடையாக வழங்கப்பட்ட 25 தொன்களுக்கும் அதிகமான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் இலங்கை ரூபாயில் 370 மில்லியன் மதிப்புடையது.

இதனை தவிர, சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார உதவி மற்றும் அரிசி, பால் மா மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பிற மனிதாபிமான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: webeditor