மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சவும் மாகாணத்தில் 50 பெண்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இப்பெண்கள் காட்டுப்பகுதியில் பழங்களை பறிப்பதற்காக சென்றனர்.
அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் அவர்களை கடத்தி சென்றுள்ளனர். இப்பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு இல்லாததால் காட்டுக்குள் பழங்களை தேடி சென்றபோது பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ளனர்.
கடத்தப்பட்ட பெண்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டு உள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து உள்ளது.