குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணி அமைக்கும் தமிழ் கட்சிகள்

5 கட்சிகள் இணைந்த ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய 5 கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி ஒப்பந்தம் இன்று நண்பகல் 12.20 மணிக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை(14) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் இதன்போது கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி ஒப்பந்தம் கைசாத்தானது.

மேலும் கூட்டணி ஒப்பந்தத்தில் கட்சிகளின் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor