2004ல் ஆனந்த சங்கரி இன்று சம்பந்தன் சுமந்திரன் சதி!

மக்களின் விருப்பத்திற்கேற்றவாறே வேட்பாளர்கள் தெரிவு ஏற்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியில் சென்ற கட்சிகளுடனும் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம், ஜனநாயகப் போராளிகள் கட்சியுடனும் பேசிக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து இறுக்கமான தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு ஒரு பேரியக்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பகை; கட்டியெழுப்புவதற்கும், எதிர்ரும் தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து பிரிக்க முடியாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாராலும் அழிக்க முடியாது என்று நிரூபித்துக் காட்டுவதற்காகவும் எதிர்வரும் சனிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்;றைச் செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்கின்றோம். அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அனைத்து சபைகளையும் கைப்பற்றி தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் இருக்கின்றார்கள் என்பதை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் தெரிவிப்போம்.

தமிழரசுக் கட்சி பிரிந்து சென்றதற்கு தொழில்நுட்ப, அட்சர கணத ரீதியான விடயங்கள் இருப்பதாக தமிழரசின் பேச்சாளர் கூறியிருந்தார். அண்மையில் கொழும்பில் இறுதியாக இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலே நானும் அந்த அட்சர கணிதம் ரீதியான விடயத்தை அவருக்கு விளங்கப் படுத்தினேன். அவர் அதனை ஏற்றும் கொண்டார். கடந்த தேர்தலிலே மூன்று கட்சிகள் சேர்ந்து மட்டுக்கு மட்டான வாக்குகள் அடிப்படையிலேயே நாங்கள் வாக்ககளைப் பெற்றோம். இந்த நிலையில் அவரின் அட்சரகணித தொழில்நுட்ப ரீதியான முறைப்படி இம்முறை நாங்கள் பிரிந்து கேட்கும் போது அந்த வாக்குகள் மூன்றாகப்; பிளவடைந்து நான்காமவருக்கே அதிகப்படியான வாக்குகள் செல்வதற்கு வழிவகுக்கும் என்ற தெளிவினை நான் அவருக்குச் சொல்லியிருந்தேன். அதனை அவர் சரியெனவும் ஏற்றுக் கொண்டார். குறைவளவாகக் கிடைக்கக் கூடிய விகிதாசார ஆசனங்களுக்காக பெருமளவான வட்டாரங்களை இழக்க வேண்டிய நிலைமை அவரது தொழில்நுட்ப ரீதியான முறையில் ஏற்படும்.

அந்த தொழில்நுட்ப ரீதியான செயற்பாடு எங்களுக்கு வீழ்ச்சியைத் தான் கொடுக்கும் அதற்காகத தான் நாங்கள் கூறினோம் ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலம்பொருந்திய அணியாக மாற்றி கூடிய வாக்கு வித்தியாசத்தில் வட்டாரங்களை நாங்கள் வென்றால் அந்த வட்டாரங்களும் கிடைக்கும் அதிகூடிய வாக்குகள்; பெற்றமையால் விகிதாசாரத்திலும் குறிப்பிட்டளவு உறுப்பினர்களைப் பெற்று நாங்கள் தனியே ஆட்சியமைக்கக் கூடிய நிலைமை உருவாகும். தனித் தனியாகக் கேட்டால் தமிழ்த் தேசியக் கூட்மைப்பும் இல்லை. தமிழ்த் தேசியமும் இல்லை. தனித்தனியே தேர்தல் கேட்கும் போது அவரவர் கட்சிகளை முதன்மைப் படுத்தி பிரச்சாரங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறாகின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பிரச்சாரம் செய்வது யார்? இந்த நிலையில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் தனித்து தனித்து nபோட்டியிடுவோம் என்றால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒன்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்குமே தவிர அங்கு தேசியம் இருக்காது.

எனவே நாங்கள் மற்றைய கட்சிகள் அனைத்தும் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பயணிக்கவுள்ளோம். அதற்கு நிச்சயமாக ஒரு கட்சியின் சின்னம் இருக்காது ஒரு பொதுவான சின்னமே இருக்கும். ஏனெனில் ஒரு கட்சியின் சின்னத்திலே கேட்டால் என்ன நடக்கும் என்பதை இரண்டாவது தடவையாக நிரூபித்துக் காட்டப்பட்டிருக்கின்றது. தற்போது குறி;த்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிருவாக ரீதியாக அறிவிப்பு வெளியிட்டு பொதுவானதொரு சின்னம் வெளியிடப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழிவதற்கோ, இல்லாமல் போவதற்கோ நாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோம். 2004ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சூரியன் சின்னத்தையும் கட்சியையும் ஆனந்தசங்கரி ஐயா எவ்வாறு தூக்கிச் சென்றாரோ அதேபோல் இன்று சுமார் 18 வருடங்களுக்குப் பின்னர் வீட்டுச் சின்னத்தையும் தமிழரசுக் கட்சியையும் ஆனந்த சங்கரி ஐயா பாணியில் சம்மந்தன் ஐயா உட்பட்டவர்கள் தூக்கிச் சென்றிருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor