எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக எந்தவொரு பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளப்போவதில்லை ஜனாதிபதி!

விரைவில் எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான எந்தவொரு பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தாம் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமை தேர்தலில் ஈடுபடுவதற்காக அல்ல என்றும், சிதைந்து போன பொருளாதாரத்தை மீட்பதற்காகவே தாம் நியமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆணையை மீறி தம்மால் இதைச் செய்ய முடியாது என்று அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது கூறியுள்ளார் என தெரியவருகிறது.

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டங்களுக்கு தலைமை

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டங்களுக்கு மாத்திரமே தலைமை தாங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 40 வீதமான புதியவர்களை ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கினால் அது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த வருடம் 4000 உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor