பெரும்பாலானோர் பூஜை அறையில் அழுக்கு படியகூடாது, எண்ணெய் பசை படக்கூடாது என்ற காரணத்தால் செய்தி பத்திரிகைகளை விரித்து அதன் மேலே சுவாமி படங்களை வைத்து விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த விடயம் மிகவும் தவறானது என்று கூறப்படுகின்றது. செய்தி பத்திரிகையில் அச்சடிக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் இருந்து எதிர்மறையான ஆற்றல்கள் வெளிவந்து கொண்டே இருக்கும்.
அந்த இடத்தில் செய்யக்கூடிய பூஜை முழுமை பெறாமல் போவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்துவிடும் என்று கூறப்படுகின்றது.
ஆகவே செய்தி பத்திரியாகையை சுவாமி அறையில் விரிக்கப்பட்டிருந்தால் அதை உடனடியாக அகற்றி விடுங்கள்.
நாற்காட்டி மற்றும் காகிதங்களை பூஜையறையில் போடலாமா அல்லது வெள்ளையாக இருக்கும் காகிதங்களை பூஜையறையில் போடலாமா என்ற கேள்வி நிச்சயம் எழும்.
எவ்வாறு வைக்கலாம்
கூடுமானவரை இப்படிப்பட்ட காகிதங்களை விரித்து அதன் மேலே சுவாமி படங்களை வைப்பதை விட, மஞ்சள் நிற துணி, பச்சை நிற துணி, காவி துணி போன்ற துணிகளை விரித்து அதன் மேலே சுவாமி படங்களை வைக்கலாம்.
ஆனாலும் இப்படி துணிகளை விரித்து அதன் மேலே விளக்கு வைத்து ஏற்றுவது என்பது கொஞ்சம் ஆபத்தான விடயமாக கருதப்படுகின்றது.
ஏனென்றால் தீப்பிடிக்கக்கூடிய எந்த ஒரு விடயத்தையும் விளக்குக்கு பக்கத்தில் வைக்க கூடாது அப்படி தவறி அதில் தீ பட்டு விட்டால் அதுவே நமக்கு ஒரு அபசகுனமாக மாறிவிடும். (விளக்குக்கு கீழே காகிதங்கள் மற்றும் துணி எதுவுமே வேண்டாம். பித்தளை தட்டு வைத்து விளக்குகளை ஏற்றுங்கள்.)
பிளாஸ்டிக்
அடுத்து பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்களை எதுவும் பூஜையில் பயன்படுத்த வேண்டாம். இந்த பிளாஸ்டிக் ஒரு விதமான எதிர்மறையான ஆற்றல் வெளிப்படுத்தக்கூடிய தன்மை கொண்டது.
பிளாஸ்டிக் சில்வரை கூடுமானவரை பூஜையறையில் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். பித்தளை, செம்பு, வெண்கலம், வெள்ளி, பாத்திரங்களை பூஜையறையில் பயன்படுத்துவது சிறப்பு.
செம்பு தகடு
ஒரு செம்பு தகட்டில் குலதெய்வத்தின் பெயரை பொறித்து பூஜையறையில் வைப்பது மிகவும் நல்லது. இதிலிருந்து வெளியேறக்கூடிய நேர்மறை ஆற்றல் குடும்பத்திற்கு நிறைவான சந்தோஷத்தை கொடுக்கும்.
மேலும் செம்புத்தகடில் குலதெய்வத்தின் பெயரை அல்லது ஒரு வரி மந்திரம் அல்லது இஷ்ட தெய்வத்தின் பெயரை எழுதிக் கூட பூஜையறையில் வைத்து வழிபாடலாம்.