30,000 பேர் ஓய்வு பெறுவது இடையூறாகாது!

டிசம்பர் 31ஆம் திகதி முதல் அரச சேவையில் இருந்து 30,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றாலும் அரச நிறுவங்களினால் வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார்.

அவர்களின் ஓய்வு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளை தொடர்வதற்கு இடையூறாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நேற்று இடம்பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை நெறிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும், அரச நிறுவனங்களால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை நெறிப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin