இம்ரான்கான் பதவியிலிருந்து வெளியேற்றப்படவில்லை என்றால், அவர் பாகிஸ்தானை இலங்கையாக மாற்றியிருப்பார் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் அஹ்சன் இக்பால் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் மாநாட்டில் நேற்று (19.12.2022) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.
சுயநலத்திற்காகவே வெளிநாட்டிலிருந்து இம்ரான் கானுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என இக்பால் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தை மாற்ற போராட்டங்கள்
அரச உடமைகளைக் கொண்ட தோஷகானாவிடமிருந்து பரிசுகளைத் திருடுவதுதான் இம்ரான்கானின் முக்கிய பணியாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகச்செய்ய போராட்டங்களை நடத்துகின்ற போதும், இலங்கையைப் போன்று வன்முறையை பயன்படுத்தப் போவதில்லை என்று இம்ரான்கான் கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.