வட கடல் பகுதியில் ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பல்களை கண்டுபிடித்த பிரித்தானிய கடற்படை

வட கடல் பகுதியில் ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக்கப்பல்கள் பயணித்துக்கொண்டிருந்ததை பிரித்தானிய கடற்படை கண்டுபிடித்துள்ளது.

பொதுவாக இதுபோன்ற கண்டுபிடிப்புகளை பிரித்தானிய பாதுகாப்புத்துறை வெளியிடுவதில்லை. ஆனால், இப்போது உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்றுவரும் நிலையில், பிரித்தானிய கடற்படை உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதைத் தொடர்ந்து இந்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், அதாவது உக்ரைன் போர் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கும் பரபலாம் என கருதப்படும் நிலையில், சம்பந்தம் இல்லாத இடத்தில் ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த செய்தியை பிரித்தானிய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.

அதுவும், பிரித்தானிய கடற்படை, கடலுக்கடியில் புதைத்துவைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் பயிற்சியை உக்ரைன் வீரர்களுக்கு அளித்து வருகிறது.

இந்த நேரத்தில் ரஷ்ய நீமூழ்கிக்கப்பல்கள் வட கடல் பகுதியில் பயணித்ததில் எந்த அளவு முக்கியத்துவம் உள்ளது என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், பிரித்தானிய கடற்படை, கடலுக்கடியில் இரகசியமாக பயணிக்கும் நீர்மூழ்கிகளை ட்ராக் செய்யும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதன் பயிற்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு வெற்றியாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor