எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்தனர் டலஸ் அலகப்பெரும தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் அமைச்சர் டலஸ் அலகப்பெரும தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

டளஸிற்கு ஆதரவு

நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளை பெற்று புதிய ஜானாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வாக்கெடுப்பின் ​போது டலஸ் அலகப்பெருமவுக்கு ஆதரவாக 82 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன.
பொதுஜன பெரமுண கட்சியை சேர்ந்த முப்பது உறுப்பினர்களின் ஆதரவு டளஸ் அலகப்பெருமவுக்கு கிடைக்கப்பெற்றது.

முக்கிய தீர்மானம்

தற்போது டளஸ் தலைமையில் பொதுஜன பெரமுண கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இணைந்து செயற்படுகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கட்சியின் தவிசாளராக ஒரு முக்கிய பதவியில் உள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் வாரங்களில் இவர்கள் எதிர்க்கட்சியின் சுயாதீன குழுவொன்றாக இயங்கத் தீர்மானித்துள்ளதாகவும், அதன்படி எதிர்க்கட்சி வரிசையில் அமர தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor