ஒன்றாரியோவில் 2200 பொதுப் போக்குவரத்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக தென் ஒன்றாரியோவில் கோ (GO Transit ) பொதுப் போக்குவரத்துப் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபடவுள்ளனர்.
UED2VC
பயணிகள் மாற்று வழிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோலிங்க் நிறுவனத்துடன் புதிய உடன்படிக்கையை எட்டுவதில் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு, வெளியிலிருந்து வரும் பணியாளர்களுடனான தொழில் உடன்படிக்கை போன்றன குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் சுமார் 2200 ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் தொழில் உடன்படிக்கை இன்றி ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிப்புறக்கணிப்பு இடம்பெறும் தென் ஒன்றாரியோ பகுதி பயணிகள் மாற்று வழிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.