திருகோணமலை- கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் முன்பாக இன்று (02) காலை ஆசிரியர்கள் கண்டனப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
வெளிவலயத்தில் கடமையாற்றும் ஐந்து தொடக்கம் எட்டு வருட ஆசிரிய சேவையினை பூர்த்தி செய்தும் இன்றுவரைக்கும் ஒரே பாடசாலையில், தூரப்பிரதேசத்தில் இருந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தாம் பணிபுரிந்து வருகின்றதாக ஆசிரியகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தங்களுக்கு , இச் செயற்பாட்டின் ஊடாக அநீதி இழைக்கப்படுதாகவும், திட்டமிட்ட இச் செயற்பாட்டினை இடைநிறுத்தியமையினால் தாங்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பணியாற்றவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே தீர்மானிக்கப்பட்ட இடமாற்ற செற்பாட்டினை பாரபட்சமற்ற முறையிலும் அரசியல் செல்வாக்குகளுக்கு அப்பாலும் நடைமுறைப்படுத்தக் கோரி , பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் இப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.