பிரான்ஸில் வருமானம் குறைந்த ஏழை குடும்பங்கள் சராசரி குடும்பத்தை விட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக கட்டணம் செலுத்துவதாக தெரியவந்துள்ளது.
இது சராசரியாக ஒரு ஏழைக் குடும்பம் ஒரு பணக்கார குடும்பத்தைப் போலவே அதே பொருட்கள் மற்றும் சேவைகளை அணுகுவதற்கு ஒவ்வொரு ஆண்டும்1500 யூரோ அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸில் அண்மையில் மேற்கொண்ட ஆய்விற்கமைய, 9.2 மில்லியன் குடும்பங்கள் அனைத்துத் துறைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு சாதாரண குடும்பம் புதிய, அதிக விலையுயர்ந்த வாகனத்தை வாங்குவதற்குப் பதிலாக, பயன்படுத்திய வாகனத்தை வாங்குவதற்கு முனைவதை உதாரணமாக கூறலாம்.
ஆனால் அதன் பின்னர் அந்த வாகனத்தை பழுது பார்ப்பதற்கும் அதற்கு எரிபொருள் செலுத்துவதற்கும் அதிக பணத்தை செலவிட நேரிடும். குறைந்த வசதியுள்ள குடும்பங்கள் சராசரியாக அறைகள் குறைவாக இருக்கும் வீடுகளை பெறுகின்ற போதிலும் அதற்கான வாடகையை பெரிய அளவிலேயே செலுத்த வேண்டியுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தரமான வீட்டுவசதிக்கான அணுக முடியாத பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த வசதி கொண்ட வீட்டினை பெறும் மக்கள் தங்கள் வருமானத்தில் 13 சதவீதத்தை வாடகைக்காக செலுத்த வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, இவ்வாறான விடயங்களை அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து பார்த்த போது வருமானம் அதிகமாக பெறுபவர்களை விடவும் குறைந்த வருமானம் பெறுபவர்களே அதிக பணத்தை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
முழுமையாக ஆராய்ந்த போது இதுவரையில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் ஆண்டுக்கு 1500 யூரோவை இழப்பதாக இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.