சட்டவிரோத மதுபான உற்பத்தி 300 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கை தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சட்ட ரீதியான மதுபான உற்பத்தி
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் சட்ட ரீதியான மதுபான உற்பத்தி 95 வீதத்தினால் உயர்வடைந்தது எனவும் இந்தக் காலப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி 50 வீதத்தினால் உயர்வடைந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மதுபான உற்பத்திகாக அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டவர்களும் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தியில் ஈடுபடுவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி
இவ்வாறு சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்யப்படுதனால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பெருந்தொகை அரச வருமானம் கலால் வரி மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.