பிரான்ஸில் வீடு வாடகைக்கு விடுவதாக சுற்றுலா பயணிகளை ஏமாற்றி பெரும் தொகை பெற்றுக்கொண்ட தம்பதி எதிராக குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Dordogne மற்றும் Côte dAzurபகுதிகளில் வாடகைக்கு வீடு தேடியவர்களிடம் 43,647 யூரோ மோசடியான முறையில் பெறப்பட்டுள்ளது.
இந்த தம்பதியால் 16 பேர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏமாற்றிய தம்பதியில் மணைவிக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், கணவனுகு்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1400 யூரோ முதல் 5800 யூரோ வரை இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 19ஆம் திகதியன்று, Périgueux பகுதியில் உள்ள நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கமைய, இந்த மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.
Abritel போன்ற ஒன்லைன் வாடகை தளங்களை பயன்படுத்தி இந்த தம்பதியினர் மோசடி செய்துள்ளனர். முதல் முறையாக 2015ஆம் ஆண்டு இந்த தம்பதி மீது முறைப்பாடு செய்யப்பட்டது. இருந்த போதிலும் தொடர்ந்து தப்பித்து வந்த தம்பதிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூயோர்க்கைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக கொத் தஸுர் பகுதிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்கமைய, இந்த தம்பதியின் வீட்டு விளம்பரத்தை பார்வையிட்ட இந்த பெண் சிறப்புச் சலுகையைப் பெற்று விடுமுறை இல்லத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
அதற்கமைய, ஒன்லைனில் பணத்தை செலுத்திய பெண், அந்த வீடு அமைந்துள்ளதாக இடத்தின் விலாசததை பெற்றுக் கொண்டு அந்த இடத்திற்கு சென்றுள்ளார். எனினும் அப்படி ஒரு இடத்தில் வீடு ஒன்றே இல்லை என்பது பின்னரே அவர் தெரிந்துக் கொண்டுள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதனை அறிந்த பெண் உடனடியாக பொலிஸ் நிலையத்திக்கு சென்று தம்பதி மீது முறைப்பாடு செய்துள்ளார்.
40 வயதிற்குட்பட்ட தம்பதி போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் தொர்தொய்ன் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமமான Lalindeவில் வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.