நாட்டின் அத்தியாவசிய பட்டியலிலுள்ள 383 வகையான மருந்துகளில், சுமார் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து பொருள் விநியோக பிரிவின் பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் டீ.ஆர்.கே.ஹேரத் தெரிவிக்கின்றார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறு தட்டுப்பாடு நிலவுகின்ற மருந்து வகைகளில், இருதய நோய்களுக்கான மருந்து வகைகளும் அடங்குவதாக அவர் கூறுகின்றார்.
”இருதய நோயை எதிர்கொள்வோர், நாக்கிற்கு கீழ் வைக்கும் மருந்து வகையொன்று உள்ளது.
எதிர்வரும் இரு வாரங்களுக்கு பின்னர் ஒரு தொகை மருந்தையேனும் கொண்டு வரவேண்டும். மேலும் சில இருதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளன.
இந்த மருந்து வகைகளுக்கும் எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. மற்றுமொரு ஊசியொன்று உள்ளது.
இந்த மூன்று வகையான மருந்துகளும் எமக்கு அவசரமாக தேவைப்படுகின்றன” என சுகாதார அமைச்சின் மருந்து பொருள் விநியோக பிரிவின் பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் டீ.ஆர்.கே.ஹேரத் தெரிவிக்கின்றார்.