குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் தெரிவித்துள்ளார் .
காய்ச்சல், இருமல், வாந்தி, சளி ஆகியவை இன்ஃப்ளூயன்ஸாவின் முக்கிய அறிகுறிகளாகும் என்று கூறிய நிபுணர், மழை காலநிலை மற்றும் குளிர் ஆகியவை இந்நோய் பரவுவதற்கு முக்கியக் காரணம் என்றும் கூறினார்.
இந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளை பாடசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு அவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .