உலகளாவிய ரீதியில் முடங்கிய வட்ஸ்அப் செயலி மீண்டும் வழமைக்கு திரும்பியது

இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் செயலிழந்திருந்த வட்ஸ்அப் செயலி தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வட்ஸ்அப் செயலி முடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப் செயலி செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலையில் ஏற்பட்டுள்ளது. இதனை சீர்செய்யும் நடவடிக்கை விரைவாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்ஸ்அப் செயலிழந்தமையினால் கோடிக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட்ஸ்அப் செயலிழப்பு

உலக முழுவதும் வட்ஸ்அப் செயலிழந்துள்ளதாகவும் பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நண்பர்களுக்கு செய்திகளை டைப் செய்ய அனுமதிக்கும் போதிலும் அதனை உரியவருக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும், வாட்ஸ்அப் இணையம் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலிகளும் செயலிழந்துள்ளன.

Recommended For You

About the Author: webeditor