டி20 சூப்பர் -12 சுற்றில் ஆஸ்திரேலியாவை 89 ரன்களில் வீழ்த்தியது நியூசிலாந்து

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.

கான்வே 92 ரன்களுடனும், நீஷம் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17.1 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, சான்ட்னர் தலா 3 விக்கெட்டும், டிட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Recommended For You

About the Author: webeditor