இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கான வரி அதிகரிப்பு

அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கான விசேட வர்த்தகப் பொருள் வரி (Special Commodity Levy) அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும்... Read more »

ஹபரணவில் யானைக்குட்டி வாகன விபத்தில் பலி

ஹபரண, ஹிரிவடுன்ன பகுதியில் சிமெந்து ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்றுடன் மோதியதில், 10 வயதுடைய யானைக்குட்டி ஒன்று இன்று காலை (27) உயிரிழந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். ஹபரண-தம்புள்ள வீதியில் ஹிரிவடுன்ன பாடசாலைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியை கடக்க முற்பட்ட... Read more »
Ad Widget

ஐ.சி.சி.பி.ஆர் (ICCPR) சட்டத்தின் கீழ் கம்மன்பில மீது விசாரணை

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டத்தின் (ICCPR) கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கமின்மையை தூண்டக்கூடிய வகையில் கம்மன்பில கூறியதாக கூறப்படும்... Read more »

செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி சிலவேளை பார்வையிடுவார் !

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிலவேளை பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள... Read more »

பிணை வழங்கப்பட்டும் முன்னாள் அரசியல் கைதி சிறையில் தொடர்ந்தும் தடுத்து வைப்பு

பிணை வழங்கப்பட்டும் முன்னாள் அரசியல் கைதி சிறையில் தொடர்ந்தும் தடுத்து வைப்பு: குடும்பத்தினர் குற்றச்சாட்டு முன்னாள் அரசியல் கைதிகள் மற்றும் முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவரான அனந்தவர்மன், அரவிந்தன் என்றழைக்கப்படுபவர், கடந்த ஜூலை 7 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட... Read more »

இளம் கடற்படை அதிகாரியின் கொடூர செயலால் பெரும் துயரில் கதறும் குடும்பம்..!

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற அவசர தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில்... Read more »

செம்மணி மனிதப் புதைகுழியில் 166 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்..!

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான நேற்றைய தினம் (26) மேலும் 16 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு... Read more »

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (27.08.2025) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு..!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் செம்மணிப் போராட்டம் வலுப்பெற அதற்கு ஆதரவு வழங்குவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைபாளர் இன்பம் அறிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தின் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக... Read more »

யாழில். சிகிச்சை பெற்ற சந்தேக நபர் தப்பியோட்டம் – பொலிஸ் சார்ஜெண்ட் பணி இடை நீக்கம்..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவத்தை அடுத்து, பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் 25ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக... Read more »