இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (18) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. பங்களாதேஷின் சட்டோகிராம் நகரில் ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி காலை 9.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. Read more »
எந்தவொரு கட்சிக்குள்ளும் தேர்தலை விரும்புபவர்களும் விரும்பாதவர்களும் உள்ளனர், ஆனால் கட்சியின் முடிவே , இறுதித் தீர்மானம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பொதுத்... Read more »
பாடசாலை மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்குள்ளான குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்தும் சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.... Read more »
மிகப் பழமையான மீன் இனமான முதலை மீன் (Alligator Gar) எனப்படும் சுமார் 9 அடி நீளமான மீன் இனம் கண்டி ஏரியில் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஏரியைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலில் பல்லுயிர் பெருக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மீன்களை... Read more »
இலங்கைத் தீவானது பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய வகையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டினது எதிர்காலம் முழுவதும் தேர்தலில் மக்களால் வழங்கப்படும் வாக்குகளில் தங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் ? ஜனாதிபதித் தேர்தல் ? என அரசியல்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே சுகீஸ்வர பண்டார இந்த விடயத்தை கூறியுள்ளார். அத்துடன், அரச எதிர்ப்புப் போராட்டங்களின் போது புலனாய்வுப்... Read more »
இந்த விபத்து ஹெல்மண்ட் மாகாணத்தின் கெராஷ்க் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் மேலும் 38 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக... Read more »
நடிகர் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோமியோ’ திரைப்படம் வருகின்ற ரமழான் பண்டிகையன்று வெளியாகவுள்ள நிலையில், இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது. முன்னதாக படத்தில் கதாநாயகி மது அருந்துவது போல் போஸ்டர் வெளியாகியிருந்தது. அதுகுறித்து, விஜய் ஆண்டனி பதிலளிக்கும்போது, “ஆண்,... Read more »
ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெப்பமான காலநிலையையும் பொருட்படுத்தாது இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார். புத்தாண்டு... Read more »
தமிழர் பாரம்பரியங்கள் மீது பொலிஸாரின் அத்துமீறல் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் கட்டிட வடிவமைப்பினை கற்கலால் உருவாக்கி பதாதைகளை தொங்கவிட்டுள்ளனர். தமிழர்கள் மற்றும் சமய பாராம்பரியங்கள் மீது அரசின் அடக்குமுறைகளை வெளிப்படுத்தும் விதமாக வவுனியா கனகராயன் குள பாடசாலை மாணவர்களால்... Read more »

