மலேசியா, இந்தோனேசியாவுக்கு ஏமாற்றம்

ஆசிய கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஜோர்தான், அதன் முதல் ஆட்டத்தில் மலேசியாவை 4-0 எனும் கோல் கணக்கில் வென்றிக்கொண்டது. இந்த ‘இ’ பிரிவு ஆட்டத்தில் ஜோர்தான் அணிக்காக மஹ்மூட் அல்-மார்டி, முசா அல்-டமாரி ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்தனர். அல்-டமாரியின் முதல் கோல்... Read more »

‘AI’ தொழில்நுட்பம்: உலகின் முதல் “Transparent OLED“ தொலைக்காட்சி

எல்ஜி (LG) டெக் நிறுவனம் இவ்வாண்டு ஆரம்பத்தில் ஒயர்லஸ் ஆடியோ மற்றும் வீடியோ டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம் கொண்டு உலகத்தின் முதல் Wireless மற்றும் Transparent OLED தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைக்காட்சியை எல்.ஜி நிறுவனம் புதிய Alpha 11 AI processor கொண்டு உருவாக்கி... Read more »
Ad Widget

இலங்கையில் அதிகரித்துள்ள மாம்பழ அறுவடை

இலங்கையில் மாம்பழ அறுவடை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023ல் நீடித்த வறண்ட வானிலையும், அதைத் தொடர்ந்து பெய்த மழையும் மாம்பழ அறுவடையை அதிகரிக்கச் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் தலைமையில்... Read more »

டெங்கு காய்ச்சலால் மற்றுமொரு பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய கொழும்பு பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் இன்று (16) பிற்பகல் உயிரிழந்துள்ளார். மானெல் உயன, மபுதுகல பகுதியைச் சேர்ந்த ஹாசினி என்ற யுவதியே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்... Read more »

நடுவானில் விமானத்தின் கழிவறையில் சிக்கிக்கொண்ட பயணி

திறக்க முடியாதபடி கதவு பூட்டிக்கொண்டதால் விமானப் பயணி ஒருவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிவறைக்குள்ளேயே சிக்கிக்கொண்டிருந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மும்பையிலிருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நிகழ்ந்துள்ளது. அதிகாலை 2.13 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் மும்பையிலிருந்து கிளம்பியது. சமிக்ஞை... Read more »

நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு

பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் நடைபெற உள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.... Read more »

பதினான்கு தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணையில்: நீதி அமைச்சர்

சிறையில் 14 தமிழ் அரசியல் கைதிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு... Read more »

தாய்லாந்து பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: 20 பேர் பலி

மத்திய தாய்லாந்தில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் பாங்கொக்கிலிருந்து வடக்கே 120 கிமீ தொலைவில் உள்ள சுபன் புரி மாகாணத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையிலேயே அந் நாட்டு நேரப்படி... Read more »

மொட்டுக் கட்சியின் வேட்பாளராக ரணிலும் களமிறங்கலாம்: நாமல்

ஜனாதிபதித் தேர்தலின்போது மொட்டுக் கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் போட்டியிடும் சந்தர்ப்பம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பத்தரமுல்லை கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே... Read more »

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டம்: பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்

கொழும்பு, விஜேராம மாவத்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர். அனைத்து பல்கலைக்காக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை கருத்திற் கொண்டு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை இன்று (17) முற்பகல் பிறப்பித்திருந்தது.... Read more »