வறியவர்களாக மாறிவரும் இலங்கையர்கள்

இலங்கையின் சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் 27 லட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது மனித அவலத்தில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்... Read more »

வெளிநாடொன்றில் சிக்கிய இளைஞனின் உதவி கோரல்!

இலங்கை இளைஞன் ஒருவர் ஓமானில் கடந்த 6 மாதங்களாக குப்பைமேட்டில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர் ஓமானில் உள்ள குப்பை மேட்டில் உடைந்த லொரியில் ஆறு மாதங்களாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குப்பை மேட்டில் வாழ்க்கை... Read more »
Ad Widget Ad Widget

இன்று வடக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி!

வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். இதற்கமைய இன்று (04) யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி மாலை 3.00 மணி முதல் 5.30 வரை யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும்... Read more »

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம்

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த கைதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மற்றுமொரு முனையம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்றுமொரு பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. விமான நிலையத்தில் நிலவும் பயணிகள் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்... Read more »

இன்றைய வானிலை நிலவும்

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று பகல் வேளைகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன்... Read more »

மின்சாரம், எரிபொருள் : விசேட வர்த்தமானி வெளியீடு

மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் செய்வது அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி நேற்று இரவு வெளியிடப்பட்டது. Read more »

க.பொ.த. உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இன்று (04) ஆரம்பமாகும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி, 2,302 பரீட்சை மத்திய நிலையங்களில் மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத்தவுள்ளனர். அத்துடன், 319 ஒருங்கிணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சீரற்ற... Read more »

தைவானிய வான்வெளியில் சீன உளவு பலூன்கள்

தைவான் நாட்டு வான்வெளியில் மூன்று சீன பலூன்கள் காணப்பட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபோன்று, கடந்த மாதமும் பலூன்கள் காணப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது. சீன பலூன்களை, உளவுக்கருவிகள் என கருதி அமெரிக்கா 2023ஆம் ஆண்டு பெப்ரவரியில் சுட்டு வீழ்த்தியது. இதனால், சீனா... Read more »

வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ள பிரித்தானிய வைத்தியர்கள்

இங்கிலாந்தில் உள்ள வைத்தியாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் நீண்டகால தொடர் வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளனர். பிரித்தானியாவின் தேசிய சுகாதாரச் சேவை வரலாற்றில் இதுவரை கண்டிராத வேலைநிறுத்தமாக அது கருதப்படுகிறது. வைத்திய ஆலோசகர் நிலைக்குக் கீழ் உள்ள இளநிலை வைத்தியர்கள் குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நீண்டகாலமாகத்... Read more »