க.பொ.த. உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இன்று (04) ஆரம்பமாகும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன்படி, 2,302 பரீட்சை மத்திய நிலையங்களில் மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத்தவுள்ளனர். அத்துடன், 319 ஒருங்கிணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக உயர்தர பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 02 ஆம் திகதி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்படி, குறித்த வேலைத்திட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்பு பொறிமுறை தயாரிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய இடையூறுகளை தவிர்ப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 எனும் இலக்கத்திற்கு அல்லது பரீட்சை திணைக்களத்தின் 1911 எனும் இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin