பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு கோரும் நுகர்வோர் அதிகாரசபை

நுகர்வோர் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க தமது அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சோதனைக்கு செல்லுகின்ற நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகளை தாக்கி கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 11 பேர் வைத்தியசாலை அனுமதி!

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி – எல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்றைய தினம் (14.05.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதி நித்திரை மயக்கத்தில் வாகனத்தைச் செலுத்தியதன் காரணமாக... Read more »
Ad Widget

இலங்கை பேருந்துகளில் அமுலுக்கு வர இருக்கும் நடைமுறை!

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க, பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகளை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நெடுஞ்சாலையில் ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் பயணிகள் பேருந்துகளை கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஜி.பி.எஸ். உதவும் என... Read more »

ஐந்து மாகாண ஆளுநர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ இதுவரை எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என பல்வேறு மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, ஐனாதிபதியோ ஐனாதிபதி செயலகமோ பதவியை... Read more »

மதுபான விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

உற்பத்தி வரிகளை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுமாயின், மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையும் குறைவடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உற்பத்தி வரிகளை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது தொடர்பில் கண்காணிக்குமாறு மதுவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் திறைசேரி ஆகியவற்றிற்கு நிதியமைச்சு அறிவுறுத்தல்... Read more »

சீமெந்தின் விலை குறைப்பு!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து மொத்த விற்பனையாளர் தீர்மானித்துள்ளனர். அதன்படி, 50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பொதியின் விலையை 150 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,தற்போது 2750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் சீமெந்து பொதி... Read more »

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

பாடசாலை விடுமுறை நாட்களில், பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதற்கு பெற்றோர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாதுக்க பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்... Read more »

தேங்காய் எண்ணெய் தொடர்பில் விடுக்கப்படுள்ள எச்சரிக்கை!

நச்சுத் தன்மைக் கலந்த தேங்காய் எண்ணெய் இலங்கையில் உள்நாட்டு வியாபாரிகளினால் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. குருநாகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அதன் பிரதான இணைப்பாளர் புத்திக... Read more »

குடும்ப வறுமை காரணமாக டுபாய் சென்ற இளைஞர் படுகொலை

குடும்ப வறுமை நிலை காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில் குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இரு சகோதரர்கள் வேலைக்காக சென்றிருந்த நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு மற்றைய... Read more »

நாளை முதல் அரச ஊழியர்கள் தொடர்பில் அமுலுக்கு வரும் நடைமுறை

அரச ஊழியர்கள் நாளைய தினம் முதல் வேலைக்குச் செல்லும் போதும், வெளியேறும் போதும் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பில் அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச... Read more »