யாழில் வீதியால் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென தீ பற்றியது!

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது. யாழ். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த வாகனம் திடீரென தீப்பற்றியது என பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தீ விபத்து நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது (21-10-2022)... Read more »

இன்றைய ராசிபலன்22.10.2022

மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள். மனதில் நிறைவு பெரும் நாள். ரிஷபம் ரிஷபம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்... Read more »
Ad Widget

காலனை வென்ற கலைஞன் ஓவியர் ஆசை இராசையா

பொதுவாகக் கலைஞர்கள் மறைவதில்லை, அவர்களது படைப்புக்களூடாக நம்மிடையே என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எனக் கூறுவது பொருத்தமானதாகும். அந்த வகையில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை கலைக்காகவே அர்ப்பணித்து, ஓவியக்கலை வரலாற்றில் தனக்கென்று ஒரு அழிக்கமுடியாத இடத்தைப் பதித்து விட்டுச் சென்றவர் ஓவியர் ஆசை இராசையா அவர்கள்.... Read more »

யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு தினம்

இந்திய இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையிலிருந்த 21 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக்... Read more »

அக்கராயனில் வெளுத்துவாங்கிய மழை

( யாழ். நிருபர் ரமணன் ) கிளிநொச்சி அக்கராயனில் (20.10.2022) காலை-8.30 மணி முதல் இன்று (21.10.2022) காலை-8.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் கூடியளவு மழை வீழ்ச்சியாக 60.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி... Read more »

இந்தியாவில் இருந்து யாழிற்கு கொண்டு வரும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்ட வெடி பொருட்கள் கடற்படையினரால் மீட்பு!

இந்தியாவில் இருந்து கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை நேற்று கடற்படையினர் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிசார் தெரிவித்தனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் கக்கடைதீவுற்கு சென்ற... Read more »

விடுதி ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட இரகசிய சுற்றிவளைப்பில் மூவர் கைது!

கல்கிஸ்ஸை – ரத்மலான பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆயுர்வேத நிலைய உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாருக்கு ரகசிய தகவல் கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்... Read more »

நாட்டில் இறக்குமதி பொருட்கள் சிலவற்றுக்கான தடை நீக்கம்!

அழகுசாதன பொருட்கள் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீக்கப்பட உள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை அறிவித்துள்ளார். குறித்த துறைகளின் பணியாளர்களினால் தொடர்ந்து முன்வைக்கப்படும்... Read more »

புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை அதேநேரம், க.பொ.த.... Read more »

நாட்டில் அறிமுகமாகும் புதிய ஓய்வூதிய முறை!

புதிய முறைமை வரிச் செலுத்துகையின் அடிப்படையிலான ஓய்வூதிய முறைமையொன்று அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூகப் பாதுகாப்பு சபையின் ஊடாக முயற்சியான்மையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது வரி செலுத்துவோருக்கான திட்டம் உற்பத்தியாளர்கள் மற்றும் முயற்சியான்மையாளர்களுக்கு எவ்வித... Read more »