கண்டியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றின் நடத்துநர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவர் பயணி ஒருவரின் நண்பர்களால் மாத்தளை பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இடம்... Read more »
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »
மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர்கள்தான், மட்டக்களப்பையும் யாழ்ப்பாணத்தையும் சிங்கப்பூர் ஆக்கப்போகின்றார்களா? என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். Read more »
மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 22 வயதான மாணவி சம்பவத்தில் கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த... Read more »
கடந்த சில தினங்களாக பிரதேச மக்களுக்கு அச்சுறுத்தலாக காவத்தமுனை-ஓட்டமாவடி ஆற்றுப்பகுதியில் நடமாடிய காட்டு யானைகளை துரத்தியடிக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. அக்கீல் அவசர சேவைப்பிரிவின் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நியாஸ்தீன் ஹாஜியார் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு முன்னெடுத்த முயற்சியின் பயனாக களத்துக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள... Read more »
கல்முனை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சமீபத்தில் கைப்பற்றப்பட்ட மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை கொத்தமல்லிகளை அழிக்கின்ற செயற்பாடு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் கல்முனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மனித... Read more »
மட்டக்களப்பில் மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி சாரதா தியேட்டர் வீதியில், நேற்றையதினம் (15) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுகாமத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட நவநீதன் சசிகலா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
கிழக்கில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான புதிய சுற்றறிக்கையை மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்தை அந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்துக்கு வெளியேயோ வார இறுதி நாட்களிலோ பணம் வசூலித்து கற்பிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த உத்தரவை மீறும்... Read more »
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு. ஊடக... Read more »
மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் அப்பகுதியில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை... Read more »

