இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இன்று முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை... Read more »
சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் கனரக வாகனமொன்றுடன் மோதியல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. Read more »
போரில் இறந்தவர்களை நினைவுகூர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு குறித்த நினைவேந்தல் தொடர்பில் சுமார் மூன்று மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றம் தன்னை விடுதலை செய்த போதிலும்,... Read more »
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்று நிரூபத்துக்கேற்ப இன்று தேசிய ரீதியில் சகல மாவட்ட செயலக அலுவலகத்தில் புதிய தேசம் அமைப்போம் இன்னும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு... Read more »
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பளாந்துறை பாடசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது. கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை 85 போத்தல் கொண்ட 65 லீற்றர் கசிப்புடன் கைது... Read more »
அதிகாரத்தில் இருக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்நியனாக மாறுவதுடன் அதிகாரம் இல்லாவிட்டால் அம்பியாக மாறிவிடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,... Read more »
தேர்தல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் 16 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளை தேருநர் இடாப்பில் பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் தலைமையில் தனியார் கற்கை நிலையத்தில் இன்று (01) இடம்... Read more »
மாவீரர் தின நாட்களில் திறம்பட செயல்படும் புலனாய்வுப் பிரிவினர் சட்ட விரோத வடி சாராய பிரச்சனையில் திணறுவது ஏன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுணதீவு மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழு கூட்டங்கள் இன்றைய... Read more »
தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்ததன் மூலம் புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 21ஆம் திகதி வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்... Read more »
சுமார் 8 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 8 இலட்சத்திற்கும் மேல் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் கடந்த... Read more »

