ஐந்து வயது சிறுமியியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது!

அம்பாறையில் ஐந்து வயது சிறுமியியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அம்பாறை பானம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 54 வயதான ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் பயிலும் ஐந்து வயது... Read more »

கிழக்கின் புதிய ஆளுநரை நேரில் வாழ்த்திய பா.உ ஜனா

கிழக்கின் புதிய ஆளுநரை நேரில் வாழ்த்திய பா.உ ஜனா… பாதைப் போக்குவரத்துக்கு கட்டண அறவீட்டினை நிறுத்துமாறு முன்வைத்த முதற் கோரிக்கைக்கு கொள்கையளவில் ஆளுநர் பச்சைக் கொடி… கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமனம் பெற்ற செந்தில் தொண்டமான் அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு... Read more »
Ad Widget

கல்முனை பிரதேச செயலகத்தினால் நடமாடும் சேவை

கல்முனை பிரதேச செயலகத்தினால் நடமாடும் சேவை இந்நடமாடும் சேவையில் காணி, சமூக சேவைகள் ,சமூர்த்தி, மோட்டார் போக்குவரத்து, திட்டமிடல் ,கலாசாரம், மகளிர் அபிவிருத்தி, தேசிய அடையாள அட்டை, பொலிஸ் ,தேசிய வீடமைப்பு அதிகார சபை, பதிவாளர் திணக்களம் ஆகிய பிரிவுகள் கலந்து கொண்டு பொது... Read more »

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட ‘வாய்வழி சுகாதாரப் பிரிவு

குறித்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல்.எம். றிபாஸ் பிரதி பணிப்பாளர் எம்.பீ.ஏ வாஜித் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் கல்முனை பிராந்திய வாய்ச்சுகாதார நிபுணர் எம்.எச்.எம் சரூக் ஏனைய பிரிவுத்தலைவர்களும் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின்... Read more »

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பூசை வழிபாடுகள், அஞ்சலிப் பிரார்த்தனைகளுடன் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக்... Read more »

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கொக்குவில் படுகொலை நினைவுத் தூபியில் முள்ளிவாய்க்கால் கஞ்சிவாரத்தின் நான்காம் நாள் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் அனுஸ்டிப்பு கஞ்சி வாரத்தின் நான்காவது நாளான இன்று தமிழர் தாயக மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கொக்குவில் படுகொலை நினைவுத் தூபியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும்... Read more »

பாண்டிருப்பு பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் பேரவல பதாதைகள் காட்சிப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை அனுஸ்டிக்கும் முகமாக பாண்டிருப்பு பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் பேரவல பதாதைகள் காட்சிப்படுத்தல் நிகழ்வு இன்றைய தினம் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் பொது மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டுவரும் இடங்களை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் விசேடசெயற்திட்டதிற்கு அமையவும், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமையவும் மாநகர ஆணையாளரின் பணிப்புரையின் கீழ் மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் பிரதி சனிக்கிழமை தோறும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு... Read more »

மட்டக்களப்பில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பிறப்பித்துள்ள உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமானதும் அபாயகரமானதுமான மணல் அகழ்வுகள் இடம்பெற்றமைக்கான விரிவான சாட்சியங்களைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதையும் புதுப்பிப்பதையும் உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு, ஜனாதிபதியின் அலுவலகத்தின் இந்த உத்தரவு... Read more »

தமிழ்த்துறைக்கான முதுகலை தத்துவமாணி பட்டம் பெற்ற ஊடகவியலாளர் ஜெஸ்மி மூஸா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளரும் இலக்கிய விமர்சகரும் கல்வியியலாளருமான ஜெஸ்மி எம்.மூஸாவுக்கு தமிழ்த்துறைக்கான முதுகலை தத்துவமாணிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.   இன்று(13-05-2023) உபவேந்தர், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் நடைபெற்ற முதலாம்... Read more »