வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கு..!

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கு..!

மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கான கருத்தரங்கானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நல்லையா மண்டபத்தில் இடம் பெற்றது.

 

நீதி மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினுடாக அரச கரும மொழி வாரத்தில் பாடசாலை தினத்தை முன்னிட்டு இவ்வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சையில் இரண்டாம் மொழி சிங்கள பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் கருத்தரங்கு கல்குடா கல்வி வலயத்தில் மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய அதிபர் ரீ.முரளிதரன் தலைமையில் நேற்று (21) இடம் பெற்றது.

 

இக்கருத்தரங்கு நிகழ்வில் கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட 100 பாடசாலைகளில் இருந்து பல மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மொழியாற்றலை மேம்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

இந் நிகழ்வில் தேசிய ஒருமைப் பாட்டு மேம்பாட்டு உதவியாளர் வி.சந்திரகுமார் கலந்து கொண்டார்.

Recommended For You

About the Author: admin