யாழ் போதனா வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்டு வந்த 21 வயதான இளைஞன் கைது!

யாழ்.போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கியுள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்வையிட வருவோரிடம் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டுவந்த 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள் தொடர்ந்து திருட்டு போயுள்ளன. அவை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின்... Read more »

யாழில் நிகழ்வு ஒன்றிற்காக பொலிசார் குவிக்கப்பட்டமையால் பதற்றம்!

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தார். வழமைக்கு மாறாக பொலிசார் களமிறக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு கடற்றொழில் அமைச்சர் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. Read more »
Ad Widget

யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய கும்பல் ஒன்று கைது!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொழுத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் யாழ்.தாவடி பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஆறு பேர்... Read more »

இயற்றாலை அ.மி.த.க. பாடசாலை மாணவர்களின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு

இயற்றாலை அ.மி.த.க. பாடசாலை மாணவர்களின் குடிநீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு நன்னீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்வும் திறப்பு விழாவும் 28/9/2022 புதன்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அதிபர் திருமதி சி.தவசொரூபி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக மேஜர் ஜெனரல் விஜயசுந்தர  கொறியன்ற் பிரான்ஸ்... Read more »

கிழக்கு நிலம் பறிபோனது போன்று வடக்கும் வேகமாக சூறையாடப்படுகிறது – சபா குகதாஸ்

தமிழர் தாயக நிலப் பிரதேசங்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டு மிக வேகமாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு இனத்தின் இருப்பும் அதன் சுயநிர்ணய உரிமையும் அதன் வாழ்விடமான நிலத்தில் தான்... Read more »

யோகக்கலை கற்கைநெறியின் புதிய பிரிவு ஆரம்பம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை  கற்கைநெறியின் புதிய பிரிவு எதிர்வரும் 08.10.2022 அன்று நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. சனி, ஞாயிறு தினங்களிலும்... Read more »

யாழ். பல்கலை. மாணவர்களால் தியாகி திலீபனுக்கு உணர்வுபூர்வமாக நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நேற்றுக் காலை 10:48 மணியளவில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்களால் ஈகச்சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தினர், விரிவுரையாளர்கள் எனப்... Read more »

தியாக தீபம் நினைவாக தேசியம் பத்திரிகை வெளியீடு

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான நேற்று தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையால் தியாகி திலீபனின் நினைவுகளைத் தாங்கியும், திலீபனின் பல்வேறு படங்களைத் தாங்கியும் ‘தேசியம்’ எனும் பெயரில் பத்திரிகை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பத்திரிகை நான்கு பக்கங்களைக்... Read more »

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குறைந்த கட்டணத்தில் பறக்க இயலும்

இந்தியாவிற்கு யாழ்.சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார். குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃபிட்ஸ் ஏர் (FitsAir) கொழும்பில் இருந்து டுபாய்,... Read more »

யாழில் மதுபானத்திற்கு பதிலாக ஓடிகலோன் குடித்தவருக்கு நேர்ந்த கதி!

மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே நேற்று (25) இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது... Read more »