சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை நிறுத்தம்

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று (09) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற... Read more »

யாழில் இருந்து சென்னைக்கான விமான கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வரும் பன்னிரண்டாம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தமிழ் நாட்டின் சென்னை விமான நிலையத்திற்கு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம் – சென்னை விமான கட்டணம் தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 6700 இந்திய... Read more »
Ad Widget

வெளிநாட்டு மோகத்தால் பல இலட்சங்களை இழந்த யாழ் இளைஞர்கள்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் நீர்கொழும்பிலுள்ள முகவரொருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துபோன சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பாக இணையவழியூடாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வடமராட்சி குடத்தனையைச் சேர்ந்த த.தர்மதாஸ் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (07)... Read more »

யாழில் மாட்டிறைச்சி வெட்டிய நபர் கைது!

யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நெடுங்காடு பகுதியில் இன்றையதினம் (07-12-2022) இறைச்சிக்காக மாட்டினை வெட்டிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் காரைநகர் பொலிஸ் காவல் அரண் பொலிஸாரால் இந்த கைது... Read more »

யாழில் குளியலறை வாளிக்குள் தவறி வீழ்ந்த குழந்தை சிகிச்சைபலனின்றி உயிரிழப்பு!

குளியலறை வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற பச்சிளம் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் பெற்றோர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு சென்று இருந்தனர்.... Read more »

வானிலை குறித்து யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

வடக்கு மாகாணத்துக்கு நாளை மறுதினம் 8 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 10 ஆம் திகதி சனிக்கிழமை வரையிலான காலப் பகுதியில் கடும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பில் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்தக் காலப் பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 200 மில்லி மீற்றருக்கும்... Read more »

மீண்டும் ஆரம்பமாக இருக்கும் யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. வாரத்திற்கு 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள்... Read more »

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு விளக்குகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டும் மக்கள்

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு சந்தையில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். யாழ் மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில் இன்று விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டிருந்தனர். இதேவேளை யாழ் நல்லூர் திருநெல்வேலி வியாபார சந்தைப்பகுதியிளும் விற்பனை மும்முரமாக இடம்பெற்றிருந்தது.... Read more »

யாழில் மருத்தவரின் காரில் இருந்து மர்மபொருள் ஒன்று மீட்பு!

யாழ்ப்பாண பகுதியில் மருத்துவரின் காரிலிருந்து ஒரு கிராம் 30 மில்லி கிராம் உயிர்கொல்லி ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது என கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் யாழ் மாவட்டம் தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் காரில் பயணித்த 26... Read more »

யாழ் உணவகம் ஒன்றில் ஜ போனை அடகுவைத்து சாப்பிட்ட நபர்

யாழ்ப்பாணத்தில் அண்மையில் வடையும் ரீயும் சாப்பிட்டமைக்காக, உணவகம் ஒன்றில் நபரொருவர் ஐ.போன் அடகு வைத்த சுவாரசியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நகர் புறத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, வெளிநாட்டு பயணி ஒருவர் உணவருந்த சென்றுள்ளார். குறித்த உணவகத்தில்... Read more »