அரச ஊழியர்களுக்கு வரும் புதிய திட்டம்!

அரச ஊழியர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பரிந்துரை திட்டத்தை விரிவுப்படுத்துவது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி அரசத்துறை பணியாளர்களை உற்பத்தி ரீதியான பணிகளில் ஈடுபடுத்தல், அதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரித்தல் குறித்த திட்டங்கள் ஆராயப்பட்டுள்ளதாக... Read more »

குட்டி இலங்கையாக மாற்றமடையும் தமிழகம்

குட்டி இலங்கையாக தமிழகம் மாறுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அண்ணாமலை, அப்போது மது விற்பனையை நம்பி மட்டுமே ஆட்சி செய்யும் மாநிலம் தமிழகம் என்றும் இலவசங்களைக் கொடுத்தால் வளர்ச்சி எப்படி கிடைக்கும்... Read more »
Ad Widget

காலிமுகத்திடலில் ஏற்ப்பட்டுள்ள சேதங்களுக்கு போராட்டக்காரர்களிடமிருந்து கோரப்படும்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் விளைவாக காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான செலவு போராட்டக்காரர்களிடமிருந்து கோரப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். போராட்ட களத்தின் மீது தமக்கு உரிமை இருப்பதாக ஒரு குழுவொன்று அடிப்படை உரிமை... Read more »

இலங்கை அமைச்சரவையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

இலங்கையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புதிய அமைச்சரவை சர்வகட்சி வேலைத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் அதற்கு... Read more »

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

அத்தியாவசிய உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை அரசாங்கத்தினால் விதிக்கப்படாவிட்டால் சில பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது. இதேவேளை, தற்போது அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சந்தையில் ஏனைய பொருட்களுக்கான விலைகளை... Read more »

திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 600 பேருக்கு நிகழ்ந்த சோகம்!

கண்டி பிரதேச ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக கூறப்படும் சுமார் 600 பேர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக கங்கவத்தகோரளை பிரதேச சபையின் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அந்த ஹோட்டலில் மூன்று திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில்... Read more »

ஒரு லீற்றர் பெற்றோல் 250 ரூபாவிற்கு வழங்க இயலும்!

நாட்டில் ஒரு லீற்றர் பெற்றோல் 250 ரூபாவிற்கு வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மிகவும் குறைந்து வருவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,... Read more »

இலங்கை மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கையின் மதுவரி திணைக்களம், அர்ஜுன் அலோசியஸின் பெர்பெச்சுவல் குழுமத்திற்கு சொந்தமான, டபிள்யூ.எம். மெண்டிஸ் அன்ட் கோ லிமிடெட் மதுபானங்களை சந்தைக்கு வெளியிட அனுமதி வழங்கியுள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்னர் வரி செலுத்தாத காரணத்தினால் டபிள்யூ.எம்.மென்டிஸ் என்ட் கோவின் மதுபான உரிமம் ரத்து செய்யப்பட்டது. எவ்வாறாயினும்,... Read more »

நாட்டு மக்களிடம் முன் வைக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நீடித்துவரும் நிலையில், சத்திர சிகிச்சைகளுக்கான உபகரணங்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது. பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் பிரிவுக்கு அவசர சத்திரசிகிச்சை பொருட்கள் தேவைப்படுவதால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.... Read more »

இலங்கை வரும் கோட்டாவை வரவேற்க பலத்த ஏற்பாடுகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பாரிய பிரசாரத்தை முகநூல் ஊடாக ஆரம்பிக்க கோட்டாபயவுக்கு விசுவாசமானவர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக #BringBackGota என்றும் #BringHomeGota என்றும் பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளனர் நாட்டுக்கு வருகை அதன்படி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும்... Read more »