நாட்டில் ஒரு லீற்றர் பெற்றோல் 250 ரூபாவிற்கு வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மிகவும் குறைந்து வருவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், 120 டொலராக இருந்த பீப்பாய் தற்போது 92 டொலர்களாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை குறைவதால் நுகர்வோருக்கு பலன் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் விலை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்த கருத்து உண்மையெனத் தெரிவித்த பாடலி சம்பிக்க ரணவக்க, நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டொலர் கட்டணத்தை செலுத்தாமையால் நாடு நெருக்கடிக்கு உள்ளாகியதாகவும், அது தொடர்பில் இதுவரையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியை ஏற்படுத்தி பலகோடி ரூபாய் சுரண்டப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.