இலங்கை மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கையின் மதுவரி திணைக்களம், அர்ஜுன் அலோசியஸின் பெர்பெச்சுவல் குழுமத்திற்கு சொந்தமான, டபிள்யூ.எம். மெண்டிஸ் அன்ட் கோ லிமிடெட் மதுபானங்களை சந்தைக்கு வெளியிட அனுமதி வழங்கியுள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் வரி செலுத்தாத காரணத்தினால் டபிள்யூ.எம்.மென்டிஸ் என்ட் கோவின் மதுபான உரிமம் ரத்து செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், இரு தரப்பினருக்கும் இடையிலான உடன்படிக்கையை அடுத்து, மதுபானம் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி
அர்ஜுன் அலோசியஸ், ஏற்கனவே இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுடன் சேர்த்து குற்றம் சுமத்தப்பட்டவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு, 2015, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் போதே இடம்பெற்றது.

எனவே இந்த மோசடி தொடர்பில் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor